#Speeed way

LatestNews

அதிவேக நெடுஞ்சாலை விபத்து….. இருவர் உயிரிழப்பு!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார். கொட்டாவையில் இருந்து மத்தளை நோக்கி பயணித்த பௌசர் ட்ரக் அதிவேக நெடுஞ்சாலையில் கவனக்குறைவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியுள்ளது. இதில் பாரவூர்தியில் பயணித்த 72 வயதுடைய முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை, பௌசர் ட்ரக் வண்டியின் சாரதியான 61 வயதுடையவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

Read More