#Special Gazeatte

LatestNewsTOP STORIES

மருந்துகளுக்கான திருத்தப்படட விலைகளுடன் வெளியானது புதிய அதிவிசேட வர்த்தமானி!!

அறுபது வகையான மருந்துகளுக்கான விலையில் திருத்தம் மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்று(15) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் (Keheliya Rambukwella) வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டுச் சபை கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.   அதன்படி, 2019 ஆம் ஆண்டு அறுபது வகையான மருந்துகள் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளிலே குறிப்பிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read More
LatestNews

பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல்…. முச்சக்கரவண்டி அலங்கரிக்க அனுமதி!!

பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி உரிமையாளர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடத்திய கலந்துரையாடலின் போது இந்த அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவும் இதில் கலந்து கொண்டார். முச்சக்கர வண்டிகளை அலங்கரிப்பது தொடர்பான பல விதிகளை திருத்தி ஓகஸ்ட் 14 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் Read More

Read More