#Police

LatestNews

17 வயதுடைய பாடசாலை மாணவன் கேரள கஞ்சாவுடன் கைது !!

குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பகுதியில்  பாடசாலை மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று மாலை மன்னார் மூர் வீதியைச் சேர்ந்த பாடசாலை மாணவனை மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு கைது செய்ததுடன் குறித்த மாணவனிடம் இருந்து 4 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில், உதவி காவல்துறை அத்தியட்சகர் சஞ்ஜீவ பண்டார மற்றும் மன்னார் Read More

Read More
LatestNews

இளைஞனை உலக்கையால் அடித்தே கொலை!!

பத்தேகம – நாகொடை வீதியின் பழைய பஸ் நிறுத்தத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் போது, 26 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், உயிரிழந்த நபர் வீட்டுக்கு சென்று (மன்னா வகை) கத்தி ஒன்றை எடுத்து வந்து உணவக உரிமையாளரை தாக்கியுள்ளார். இந்நிலையில் அங்கு நின்ற உணவக உரிமையாளரின் மகன் உலக்கை ஒன்றினால் குறித்த Read More

Read More
LatestNews

மூன்று கொள்ளையர்களில் ஒருவரை தாக்கி கொலை செய்த பிரதேச வாசிகள்!!

கொழும்பின் புறநகர் பகுதியான முல்லேரியா மாளிகாகொடல்ல பிரதேசத்தில் வீடொன்றில் கொள்ளையிடச் சென்ற மூன்று கொள்ளையர்களில் ஒருவர், பிரதேசவாசிகள் தாக்கியதில் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி பொருட்களை கொள்ளையிட்டு கொண்டிருந்த போது, வீட்டார் சத்தமிடுவதை கேட்ட அயல் வீடுகளில் உள்ளவர்கள் அங்கு சென்று கொள்ளையர்களை பிடித்துள்ளனர். பிரதேசவாசிகளின் தாக்குதல் படுகாயமடைந்த கொள்ளையர்களில் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஏனைய இரண்டு சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளை Read More

Read More
LatestNews

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அம்பியுலன்ஸ் உட்பட ஒன்றுடன் ஒன்று மோதிய 5 வாகனங்கள்!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் காவல்துறையின் விஷேட அதிரடிப்படையின் 1969 அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்று உட்பட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த விபத்தானது கெலனிகம 12.3 ஆம் கட்டைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது 5 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களுள் காவல்துறையின் விஷேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

Read More
LatestNews

ஒக்டோபர் 31 அதிகாலை 4 மணிக்கு தளரவுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள்…. ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய தீர்மானங்கள்!!

தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 4மணிக்குப் பின்னர் நீக்குவதற்கு கொவிட் செயலணி தீர்மானித்துள்ளது. புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார். இன்று காலை காணொளி தொழில்நுட்பம் ஊடாக கொவிட் தடுப்புக் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது மேற்கொள்ள முடிவுகள் வருமாறு, * நடைமுறையில் இருந்த மாகாணங்களுக்கு Read More

Read More
LatestNews

பாசையூர் பகுதியில் மீட்கப்பட்டது 1,500 கிலோ கிராம் மஞ்சள்!!

யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியில் 1,500 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்து 2 படகுகளில் 24 மூடைகளாகப் பொதி செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் சிறிலங்கா காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் புலனாய்வு பிரிவினரால் இன்று காலை இந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டன.   மஞ்சளைக் கடத்தி வந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாசையூரைச் சேர்ந்த 64 மற்றும் 32 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் சுங்கதிணைக்கள Read More

Read More
LatestNews

பளை பொலிஸ் பிரிவில் தூக்கில் தொங்கிய இளம் குடும்பஸ்தர்!!

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் நேற்று (20) இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இயக்கச்சியில் ஏ9வீதி அருகே உள்ள பராமரிப்பு இல்லாத தனிநபர் ஒருவரின் காணியிலேயே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். கரந்தாய் பளையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான காசிநாதர் கஜிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று 12 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டவரே இன்று மாலை 4.00மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read More

Read More
LatestNews

பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மற்றும் ஒழுங்கு செய்தவர்களின் விபரங்களை CID இற்கு வழங்கவும்!!

ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்கக்கோரி நடத்தப்பட்ட பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மற்றும் அந்த போராட்டங்களை ஒழுங்கு செய்தவர்களின் விபரங்களை சிஐடிக்கு வழங்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிஐடி அறிவுறுத்தியுள்ளது. 25,07, 2021 மற்றும் 05,08, 2021 முன் நடந்த போராட்டங்கள் பற்றிய தகவல்களை செப்ரெம்பர் 25 க்கு முன் அளிக்குமாறு சிஐடி செப்ரெம்பர் 06 ஆம் திகதி அனைத்து காவல் நிலையங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி, ஆசிரியர்-தலைமை பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களின் இடங்கள் Read More

Read More
LatestNewsTOP STORIES

சுன்னாகத்தினைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவ பீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை. சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார். குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் Read More

Read More
LatestNews

மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன் போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் கசிப்பு, கோடா பரல்கள் போன்றவையும் மீட்கப்பட்டதாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம். ஆர். எஸ். கோணர தெரிவித்தார். ஆயித்தியமலை கற்பானைக் குளம் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டபோது புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலுக்கமைவாக  சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த சுற்றிவளைப்பில் மூன்று பரல் கோடா, 25 லீற்றர் கசிப்பு மற்றும் Read More

Read More