#people

LatestNews

கொரோனா கட்டுபாடுகள் நீக்கம் தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு!!

நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த கொரோனா சுகாதார கட்டுப்பாடுகள் சில நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலைமை காரணமாக விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று இன்று வெளியிடப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஏற்கனவே, 5 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் கடந்த 4ஆம் திகதி சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNews

நாட்டில் குறைந்து செல்லும் தொற்றாளர்கள்! இராணுவத் தளபதி பெவளியிட்ட தகவல்!!

நாட்டில் மேலும் 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று இதுவரை 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 253,024 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More
LatestNews

முல்லையில் குண்டு வெடிப்பு சம்பவம்- விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட மேலுமொரு அபாயகர பொருள்!!

முல்லைத்தீவு சுவாமி தோட்டப் பகுதியில் குப்பைக்கு தீ மூட்டிய போது குண்டு வெடித்ததில் அங்கு பணியாற்றி வந்த ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லதைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை சுவாமி தோட்டம் தென்னந்தோட்டப் பகுதியில் குப்பைகளை கூட்டி எரித்த போதே குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்துள்ளது. அங்கு பணியாற்றி வந்த புதுக்குடியிருப்பினை சேர்ந்தவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சபம்வம் குறித்து முல்லைத்தீவு பொலிசார் சம்பவ இடத்திற்கு Read More

Read More
LatestNews

கைத்தொலைபேசிகளுக்குள் மீண்டும் ஊடுருவும் ‘ஜோக்கர்’ – மக்களுக்கு எச்சரிக்கை!!

‘ஜோக்கர்’ என்ற வைரஸ் மூலம் கைத்தொலைபேசியில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படுவது மட்டுமின்றி கைத்தொலைபேசியை செயலிழக்கச் செய்வதாகவும் குயிக் ஹீல் அன்டிவைரஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. முன்னதாக கடந்த 2020 ஜூலையில், கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கக்கூடிய 40க்கும் மேற்பட்ட செயலிகளை இந்த வைரஸ்கள் குறிவைத்திருந்தது. இதனையடுத்து, குறித்த செயலிகளை ப்ளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியது. தற்போது ‘ஜோக்கர்’ என்ற இந்த வைரஸ் 8 க்கும் மேற்பட்ட செயலிகள் மூலம் கைத்தொலைபேசிகளுக்குள் ஊடுருவி, தகவல்களை திருடி வருவதாக தெரியவந்துள்ளது. Read More

Read More
LatestNews

முல்லைத்தீவில் வசிக்கும் மக்களின் விபரங்களை 1 மணி நேரத்திற்குள் வழங்குமாறு பொலிஸார் பணிப்பு!!

முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் விபரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், தங்கியிருப்பவர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான படிவம் இன்று வழங்கப்பட்டுள்ளது. இவற்றைப் பதிவு செய்து ஒரு மணி நேரத்தில் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் வசிக்கும் கிராமவாசி ஒருவர் ஊடாக பொலிஸார் இந்த நடவடிக்கையை இன்று ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் (1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க Read More

Read More
LatestNews

ஆகஸ்ட் மாதம் முதல் மாற்றம்! மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

வீட்டிலிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும் புதிய கற்றல் முறையொன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த புதிய நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இணைய வழியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் அதே வழியில் திறனை வளர்த்துக் கொள்கிறார்களா என்ற பிரச்சினையின் காரணமாக புதிய முறையொன்றை அறிமுகப்படுத்துவதாக  இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Read More
LatestNews

இராணுவத் தளபதி மற்றும் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள முக்கிய செய்தி!!

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். தேவையற்ற விதத்தில் அதிகமான ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அதேவேளை பிரதேச செயலாளர் அலுவலகங்களின் அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். சில வர்த்தக நிலையங்களை Read More

Read More
LatestNews

யாழில் மீன் வியாபாரம் செய்த அறுவர் கைது!!

யாழ்ப்பாணம் – குளப்பிட்டி சந்திக்கு அருகில் மீன் வியாபாரம் செய்த ஆறு பேர் பயணக்கட்டுப்பாட்டு நடைமுறையகளை மீறீய குற்றச்சாட்டில் கைது யாழ்ப்பாணம் பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளனர். எனினும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த முக்கிய அமைப்பொன்றின் தரப்பினர் 30ற்கும் அதிகமானோரை அழைத்து கூட்டம் கூட்டியவர்கள் வெறும் எச்சரிக்கை மாத்திரம் செய்து விடுவிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் மக்களை Read More

Read More
LatestNewsTOP STORIES

Gas விலை அதிகரிப்புச் செய்வதா? இல்லையா? நாளை இறுதி முடிவு!!

சமையல் எரிவாயு நிறுவனங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு அமைய விலை அதிகரிப்புச் செய்வதா? இல்லையா? என்பது தொடர்பில் அமைச்சரவை உப குழு நாளை கூடி இறுதி முடிவை அறிவிக்கும் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 500 தொடக்கம் 700 ரூபா வரை சமையல் எரிவாயு விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கடந்த நாட்களில் தெரிவித்திருந்தார். விலைகள் தொடர்பில் Read More

Read More
LatestNews

ஜூன் மாதம் முழுவதும் ஊரடங்குச் சட்டம்! கோட்டாபய தலைமையில் ஆராய்வு!!!!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளபயணத்தடை காரணமாக கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் எதிர்பார்த்த எதுவும் நடக்காத நிலையில், ஜூன் மாதம் முழுவது பூரணமான ஊரடங்குச சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் குறித்த அராய்வு மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் 11ஆம் திகதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

Read More