CSK அணியில் மற்றொரு இளம் வீரர்..!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் ஏறக்குறைய முதல் பாதி போட்டிகளில் (7) விளையாடியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 7போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் அடைந்தார்.
இதனால் இந்த
தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக இளம் வீரரான மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே அணியில் சேர்க்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.இந்த நிலையில் ஆயுஷ் மாத்ரே அணியில் இணைந்துள்ளதை உறுதி செய்யும் வகையில், சிஎஸ்கே போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம்
காரணமாக விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸை அணியில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.