வவுனியா யுவதி றம்பொடையில் சடலமாக மீட்ப்பு….. மேலும் இருவர் மாயம்!!

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13/04/2022) காலை மீட்கப்பட்டுள்ளது. ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. வடமாகாணத்தில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில் புத்தாண்டை முன்னிட்டு மலையகத்தில் நுவரெலியாவுக்கு Read More

Read more

ஹோட்டலின் 5வது மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!!

நுவரெலியாவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தொழில் புரிந்து வந்த முகாமையாளர் ஒருவர் ஹோட்டலின் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை நுவரெலியாவில் உள்ள பிரதான சுற்றுலா ஹோட்டலின் (Green Araliya)5வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த ஹோட்டலில் முகாமையாளராக தொழில் புரிந்து வந்த கம்பளை தொலஸ்பாகே வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 47 வயதான தரங்க பிரியந்த ஹெட்டியாராச்சி என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சுற்றுலா ஹோட்டலின் ஊழியர்கள் Read More

Read more

திடீரென முடக்கப்படட இடங்கள் – மீண்டும் படிப்படியாக முடக்கப்படுமா நாடு??

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10 மணி முதல் அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பகுதி முடக்கப்படவுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம் ரக்கீப் தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக்கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று இரவு முதல் மருதமுனை பிரதேசத்திற்கு வெளியில் இருந்து பொதுமக்கள் உட்பிரவேசிப்பதும், மருதமுனையில் இருந்து வெளியேறுவதும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி நுவரெலியா Read More

Read more

நீர்வீழ்ச்சியில் கிடைத்த பஞ்ச லிங்கங்களை பாதுகாக்கும் நாகங்கள்! எல்லை மீறினால் உயிருக்கு ஆபத்து? எங்கு தெரியுமா????

இலங்கை, தொன்மை வாய்ந்த வரலாற்று சிறப்பு ஒரு நாடாகும். நான்கு பக்கமும் நீர் சூழ, மலைகளும், அடர்ந்த காடுகளும் அதன் நடுவே விசாலமான நீர் வீழ்ச்சிக்களும் என சொர்க்கத்தையே கண்முன் காட்டிவிடுவதாய் அமைந்ததுதான் இலங்கைத் தீவு. நுவரெலியா இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். எப்போதும் குளுகுளுவென வானிலை இருப்பது இதன் சிறப்பம்சமாகும். இலங்கையில் உள்ள நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் டன்சினன் தூவான கங்கை நீர்வீழ்ச்சி ஓர் இயற்கையின் அதிசயம். இந்நீர்வீழ்ச்சி 100 மீற்றர் உயரத்தில் Read More

Read more

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!!

சீரற்ற வானிலையால், 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. அதற்கமைய, காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கும் களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, கலவான, அயகம Read More

Read more

விவசாயிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!!!!

நுவரெலியா மாவட்டத்தில் ஒரு சில வியாபாரிகள் இரசாயன உரவகைகளுக்கும் கிருமிநாசினிகளுக்கும் தட்டுப்பாடு நிலவும் வண்ணம் செயற்படுகின்றமையால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசாங்கம் இரசாயன உரவகைகளை இறக்குமதி செய்வது தொடர்பாக தடை விதித்திருக்கின்ற நிலையில் ஒரு சில வியாபாரிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளை இலாபம் பெறுகின்ற வகையில் தங்களுடைய வியாபார நிலையங்களில் இரசாயன உரவகைகளையும் கிருமிநாசினிகளையும் பதுக்கி வைத்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில்,   இதுவரை காலமும் வழங்கப்பட்ட Read More

Read more