நாட்டில் மூடப்படவுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள் – வெளியான பின்னணி
நாட்டில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வட மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்கான நடவடிக்கையில் கல்வி அமைச்சு (Ministry of Education) ஈடுபட்டுள்ளது. வட மாகாணத்தில் ஐம்பதுக்கும் குறைந்த மாணவர்கள் கல்வி கற்கும் 266 பாடசாலைகள் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Read More