#Milkpowder

LatestNewsTOP STORIES

இரு நாட்களில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்….. பால் மா இறக்குமதியாளர்கள்!!

இறக்குமதி செய்யப்படும் பால் மா பொதி ஒன்றின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கிராம் பால் மா பொதியின் விலையை 550-600 ரூபாவால் அதிகரிக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். பால் மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் இரண்டு நாட்களில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read More
FEATUREDLatestNews

பால்மா தொடர்பில் வெளியிடப்பட்ட மற்றுமொரு புதிய செய்தி

வார இறுதியில் தட்டுப்பாடின்றி நுகர்வோர் பால்மாவினை சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியுமென பால்மா வர்த்தகர்கள் சங்கத்தின் முக்கியஸ்தரான லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்தார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், மேலும் 8000 தொன் பால் மாவுக்கான தட்டுப்பாடு தற்போது சந்தையில் நிலவுவதாகவும் மட்டுப்படுத்தப்பட்ட தினங்களில் ஒரே தடவையில் பெருமளவு பால்மாவை சந்தைக்கு விநியோகிக்க முடியாதுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் மேலும் 8 கொள்கலன் பால்மா விடுவிக்கப்படுவதற்காக துறைமுகத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   Read More

Read More