எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பு கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் சொந்த துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.   22 வயதான குறித்த இராணுவ வீரரின் சடலம் இன்று அதிகாலை வெள்ளவத்தையில் மீட்கப்பட்டுள்ளது.   உயிரிழந்தவர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள இல்லத்திற்கு செல்லும் ஒழுங்கையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தார் என மேலும் குறிப்பிடப்படுகின்றது.

Read more

கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோரை கைது செய்ய முடியாது – சுமந்திரன் எம்.பி!!

கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோரை கைது செய்ய முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா அரச தரப்பின் உதவியுடன் யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதை மிகுந்த கவலையுடன் நினைவுகூருவதாக குறிப்பிட்டார். இதன்போது, ஸ்ரீலங்கா வாழ் மக்களுக்காக புலம்பெயர் சொந்தங்கள் கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை கொள்வனவு செய்து வழங்க முன்வந்துள்ளமைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் Read More

Read more