#lock down

LatestNews

மாவட்டங்களுக்கு இடையேயும் பயணக்கட்டுப்பாடுகள்?

நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் எதிர்காலத்தில் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்றையதினம் சுகாதார அதிகாரிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடத்திய கலந்துரையாடல்களை அடுத்து எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNews

இன்று காலை 21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டில் மேலும் 21 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நடவடிக்கையை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எடுத்துள்ளார். இதற்கமைய, இரத்தினபுரி – ரக்வான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலோ கந்த, ரம்புக, கத்லான, தனபெல, இம்புக்கந்த பொத்துபிட்டிய கிராம சேவகர் பிரிவுகள். இரத்தினபுரி – கலவான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனபொல, குடுபிட்டிய, குடாஹ, தெல்கொட கிழக்கு, தெல்கொட மேற்கு, தேவகலகம, தந்தகமுவ, கொஸ்வத்த, தபஸ்ஸர கந்த, வதுராவ, வெம்பிட்டியகொட, வெத்தாகல Read More

Read More
LatestNews

திருகோணமலையில் முடக்கப்பட்ட மேலும் ஒரு பகுதி- இராணுவம் பொலிஸார் கடமையில்!

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது. திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம் சுபதலங்கர மாவத்த தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பகுதியில் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வீதிகளை மறித்து காவல்துறை மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக திருகோணமலையில் ஏற்கனவே பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More