யாழ். மாவட்டச் செயலக பணிகள் ஆரம்பம்!!

யாழ். மாவட்டச் செயலக காணிப் பதிவக பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. யாழ். மாவட்ட காணிப் பதிவகத்தின் செயற்பாடுகள் இன்று (06) ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்டளவிலான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சேவையின் அவசர தன்மையை கருதி காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை, 021-2225681 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முற்பதிவினை மேற்கொண்டு சேவையினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

இளைஞர் யுவதிகளுக்கோர் அரிய வாய்ப்பு! நவம்பர் 15 வரை மாத்திரமே

பாவனையில் இல்லாத அரச காணிகளை அல்லது மத்தியதர வகுப்புத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு உரிமையாளர்களால் பராமரிக்கப்படாமல் இருக்கின்ற காணித்துண்டுகளை காணி கோரும் இளம் தொழில் முனைப்பாளர்களுக்கு (45 வயதுக்கு உட்பட்டோர்) நிபந்தனைகளுடன் வழங்க அரசாங்கம் முடிவசெய்துள்ளது. இதன்படி, ஒரு இலட்சம் காணித்துண்டுகளை உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பை அழுத்தி விண்ணப்பப் படிவத்தை (தரவிறக்குவதன் மூலம்) பெற்று, பூர்த்தி செய்து – உங்களது பிரதேச செயலகத்தில் கையளிப்பதன் மூலம் உங்களுக்கான வாய்ப்பை உறுதிசெய்ய முடியும். இதன் இறுதித் Read More

Read more