இலங்கையிலுள்ள 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் வெறும் 20 இற்கும் குறைவானவை மாத்திரமே சரிவர இயங்குநிலையில்!!

இலங்கையில் உள்ள 77 சுனாமி ஆழிப்பேரலை எச்சரிக்கை கோபுரங்களில் தற்போது 20 மாத்திரம் சரிவர இயங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இடர் முகாமைத்துவ நிலையத்திடம் இருந்து சர்வதேச ஊடகமொன்று பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் அமைக்கப்பட்ட சுனாமி ஆழிப்பேரலை எச்சரிக்கை கோபுரங்கள் சரிவர பராமரிக்கப்படாத காரணத்தால், தற்போது அவற்றுள் 57 கோபுரங்கள் முற்றாக செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 8 சுனாமி ஆழிப்பேரலை எச்சரிக்கை கோபுரங்களில் தற்போது 2 மாத்திரம் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 9 சுனாமி ஆழிப்பேரலை எச்சரிக்கை கோபுரங்களில் தற்போது ஒரு கோபுரம் மாத்திரமே இயங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் உள்ள 7 சுனாமி ஆழிப்பேரலை எச்சரிக்கை கோபுரங்களும், கிழக்கு மாகாணத்தின் கிண்ணியா, நிந்தவூர் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கோபுரங்களும் முற்றாக செயலிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை,

இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திலிருந்து 11 கோபுரங்களை இயக்க முடியும் என்பதுடன் மேலும் 9 கோபுரங்களுக்கு அருகில் சென்றால் மாத்திரமே இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோபுரங்கள் தொடர்பான தொழில்நுட்பம் காலாவதியாகியுள்ளதால் அவற்றை தயாரித்த நிறுவனம் அதன் உபகரண தயாரிப்பையும் நிறுத்தியுள்ளதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில்,

தொலைபேசி நிறுவனங்களுடன் இணைந்து புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த இடர் முகாமைத்துவ நிலையம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்,

கடந்த வார இறுதிப்பகுதியில் எதிர்வரும் ஆண்டு நிறைவதற்கு முதல் இலங்கையை பாரிய சுனாமி பேரலைகள் தாக்கும் என செய்தி ஓன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடமை செய்தி…………… (2024 முடிவதற்குள் இலங்கை என்ற நாடு வரைபடத்தில் கூட இல்லமல் அழியும் – சென்னை தேனாம்பேட்டை வரை கடலாக மாறிவிடும்….. கருத்தால் பரபரப்பு!!)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *