#kodikaamam

LatestNewsTOP STORIES

முச்சக்கர வண்டி – குளிரூட்டி வாகனம் மோதல்…… ஆபத்தான நிலையில் சாரதி!!

முச்சக்கர வண்டியும், குளிரூட்டி வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை, கொடிகாமம், இராமாவில் பகுதியில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த எஸ்.யுகிந்தன் என்ற இளைஞரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரி பகுதியில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி இராமாவில் பகுதியில் வலது பக்கமாக அல்லாரை வீதிக்கு திரும்ப முற்பட்ட வேளை பின்னே பயணித்த குளிரூட்டி Read More

Read More
LatestNews

யாழில் இடித்தழிக்கப்பட்ட பிள்ளையார் ஆலயம்- முரணான தகவல்களை வழங்கிய சந்தேக நபர்!!

யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலை மிருசுவிலில் அமைந்திருந்த பிள்ளையார் கோவிலை இடித்தழித்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர். கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடையில் வீதியோரமாக அமைந்திருந்த சிறிய பிள்ளையார் ஆலயம் கடந்த 7ஆம் திகதி இடித்து உடைக்கப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் கொடிக்காம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் ஆலயத்தை டிப்பர் வாகனம் ஒன்றினால் மோதியே உடைத்தமையை கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் குறித்த டிப்பர் வாகனம் தொடர்பிலான தகவலினை பெற்று டிப்பர் வாகனத்தை தேடியுள்ளனர்.  Read More

Read More
LatestNews

யாழ். தென்மராட்சியில் சில பகுதிகள் முடக்கம்

யாழ். தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே இன்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்படவுள்ளது. அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளையும் Read More

Read More