#katunayake airport

FEATUREDLatestNewsTOP STORIES

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை!!

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான நான்கு விமானங்கள் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு மணிக்கணக்கில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். சிங்கப்பூர், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக சென்றன. நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பாகிஸ்தானின் லாகூர் நோக்கிப் புறப்படவிருந்த UL 153 என்ற விமானம் தாமதமானதால், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீண்டும் வீட்டிற்கு செல்ல நேரிட்டது. அதன்பின், இந்தியாவின் சென்னை Read More

Read More
FEATUREDLatestNews

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 8 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டது!

பிரான்ஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த, கறுப்புப்பூச்சு பூசப்பட்ட சுமார் 4 கிலோ 611 கிராம் தங்கம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்தின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண மதிப்பீட்டுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியானது எட்டரைக் கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை தொடர்பில் சுங்க அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “35 வயதுடைய இந்த பிரான்ஸ் நாட்டவர், இதற்கு முன்னரும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும்!!

எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் இதனை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னைக்கு திரும்பியுள்ளதாகவும் விமான நிலையத் Read More

Read More
LatestNews

வெடிபொருட்களுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!!

வெடிபொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழைய முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொட்டாசியம் பெர்குளோரேட் (Potassium perchlorate) என்ற வெடிபொருட்களுடன் வாடகை வாகன சாரதியான குறித்த நபர், விமான நிலைய காவல்துறையினரால் சிற்றூர்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 25 கிலோகிராம் பொட்டாசியம் பெர்குளோரேட் வெடிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறை முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளது. குறித்த சிற்றூர்தியின் உரிமையாளர், நீர்கொழும்பு – கிம்புலாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரென விசாரணைகளில் Read More

Read More