இன்றைய மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவித்தல்!!

மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்க பெறாமையினால் இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றும் நாடு முழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 03 பிரிவுகளில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது. 541 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இன்றும் மின் தடையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக Read More

Read more

இன்று நாடுமுழுவதும் ஒரு மணிநேர மின் வெட்டு!

நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க ( Janaka Ratnayake) தெரிவித்துள்ளார். அதன்படி, பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும், மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும். இந்த நேர அளவு நாளாந்த நிலைமையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Read more

இன்று முதல் மின்வெட்டு….. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!!

இன்று முதல் மின்வெட்டை நடைமுறைப்படுத்த நேரிடும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   நீர்த்தேக்கங்களில் நீரை சேமிப்பதற்காகவும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் நாளாந்த மின்வெட்டுக்கான காலம் நெருங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமைகள் குறித்து நேற்றைய தினம் விரிவாக ஆராயப்பட்டதாகவும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் கால அட்டவணை பெரும்பாலும் இன்று வெளியிடப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மின்உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்நிலைகளின் நீரை சேமித்துக் கொள்ளும் நோக்கில் மின்சாரத்தை Read More

Read more

மின்தடை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்!!

மின்சாரத்தை தடையின்றி பெறுவதற்கு தேவையான அளவு மின்சார உற்பத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை  வரை மின்தடை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனம் செலுத்த வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read more