அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் 4 நாட்கள் மாத்திரம் திறக்கப்படும்…… Ranjith Ariyaratane!!

நாடளாவிய ரீதியில் அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் 4 நாட்கள் மாத்திரம் திறக்கப்படும் என அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள எதிர்வரும் வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டும் அஞ்சல் அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளது. அதற்கமைய, திங்கள், செவ்வாய் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாத்திரம் அஞ்சல் அலுவலகங்கள் திறக்கப்படும் என அஞ்சல்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more

கொரோனா தொற்று உறுதியாகுபவர்களின் எண்ணிக்கை குறைவடைகின்ற போது தான் நாட்டை திறக்க முடியும்…… சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்பவரின் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது. 20 – 30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், தடுப்பசி வழங்கும் செயற்பாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. விரைவில் இந்த தடுப்பூசி திட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Read more

எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4 மணி வரை நீடிக்கப்பட்ட்து ஊரடங்கு உத்தரவு!!

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஜனாதிபதியின் ஊடகசெயலாளர் மற்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் தமது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.   ஜனாதிபதியின் ஊடகசெயலாளரின் Twitter பதிவை பார்வையிட இங்கே Click செய்யவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் Twitter பதிவை பார்வையிட இங்கே Click செய்யவும்   எதிர்வரும் திங்கட் கிழமை  தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு உத்தரவு, வேகமாக Read More

Read more

இன்று மாலை மூன்று மணிக்குள் முடிவு!!

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாமா? அல்லது வேண்டாமா என்ற முடிவு இன்று (03) மாலைக்குள் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார். சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கொரோனாவை ஒழிக்கும் தேசிய செயலணி இன்று ஜனாதிபதி தலைமையில் கூடி உண்மை நிலையை ஆராயும். பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என இராணுவத் தளபதி கூறினார். இதேவேளை, கொரோனா பரவலை தடுப்பதற்கு நாடளாவிய ரீதியில் 18 Read More

Read more