மேலும் பல சுகாதார நடைமுறைகள் தொடர்பில் வெளியானது சுகாதார வழிகாட்டி!!

நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி மேலும் சில துறையினரின் நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கும் நோக்கில் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார வழிகாட்டியும் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய உள்ளக இசைநிகழ்ச்சிகளை மண்டப கொள்ளளவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடத்த புதிய சுகாதார வழிகாட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மிருக காட்சிசாலைகளை பார்வையிட ஒரு தடவையில் 25 வீதமானவர்களுக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று முதல் மத வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டல்கள் வெவ்வேறாக வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *