#Government

CINEMAEntertainmentindiaLatestNews

“விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் வென்ற இலங்கை தமிழ் நடிகை!!

இலங்கையின் தமிழ், சிங்கள சினிமா நடிகையான நிரஞ்சனி சண்முகராஜாவுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இவர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பல தமிழ், சிங்கள திரைப்படங்களில் நடித்துள்ளதுடன் அண்மையில் இலங்கையில் வெளியிடப்பட்ட சுனாமி திரைப்படத்துக்காக சர்வதேச விருதுவென்ற இலங்கை நடிகையாவார். இலங்கை அரசினால் அண்மைக் காலத்தில் தமிழ் திரைக் கலைஞர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட மேற்படி கௌரவம் ஒட்டுமொத்த தமிழ் கலைஞர்களுக்குமான அங்கீகாரத்தின் முன்னோடியாக பார்க்கப்படுவதாக தெரிவித்து துறைசார்ந்தவர்கள் வாழ்த்துக்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNews

500 ரூபாவிலும் அதிகரிக்கும் சாத்தியம்….. ராஜபக்ச குடும்ப உறுப்பினர்!!

இலங்கையில் ஒரு கிலோ கிராம் அரிசியில் விலை 500 ரூபாயை விடவும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குடும்ப உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச (Shashindra Rajapaksa) தெரிவித்துள்ளார். நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், முன்னதாக ஒரு தொன் யூரியா 278 அமெரிக்க டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரு டன் யூரியாவின் விலை Read More

Read More
LatestNews

மியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்!!

சந்தையில் அரிசி விலையை சீரான துறையில் பேணுவதற்கு மியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒரு மெற்றிக்தொன் 460 அமெரிக்க டொலர்களுக்கு, வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான கொள்ளளவைப் பேணுவதற்கும் இயலுமான வகையில் ஒரு லட்சம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு செப்டெம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் Read More

Read More
LatestNews

“அரச ஊழியர்கள் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்ககூடாது – மீறினால் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை….. ” உள்துறை இராஜாங்க அமைச்சு!!

அரசாங்கத்திற்கு எதிரான எதிர்மறையான கருத்துக்கள் வெளியாவதை தடுப்பதற்காக “அரசாங்க ஊழியர்கள் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்ககூடாது” என உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை உள்துறை இராஜாங்க அமைச்சு  பிறப்பித்துள்ளது. சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும் கருத்துக்களை வெளியிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அரசாங்க ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். பிரதேச செயலாளர்கள் கிராமசேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்தே அரசாங்கத்திடமிருந்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. அரசசேவைக்கு அபகீர்த்தியை Read More

Read More
LatestNews

15 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதி சந்தை விலையிலும் 1000 ரூபா குறைவில்!!

லங்கா சதொச விற்பனை நிறுவனத்திடமிருந்து 15 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஒரு பொதியை தற்போதைய சந்தை விலையை விட 1000 ரூபாய் குறைவாக வாங்க முடியுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) அறிவித்துள்ளார். சதொச நிறுவனத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 1998இற்கு அழைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இந்த 15 பொருட்களையும் நிவாரண விலைக்கு கொள்வனவு செய்ய முடியும் என இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More
LatestNews

பசு வதை சட்டத்தை நீக்க அரசாங்கம் தீர்மானம்!!

இலங்கையின் உள்ளூர் விவசாயத்துறை மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பசு வதை செய்வதை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பசு வதையுடன் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளையும், விலங்கு அறுப்பு தொடர்பாக உள்ளூராட்சி மன்றங்களால் நிறைவேற்றப்பட்டுள்ள துணைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கும் கடந்த செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 272 ஆம் அத்தியாயத்தின் 1893 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பசு Read More

Read More
indiaLatestNews

தமிழக பள்ளிகள் நாளை தொடக்கம் பாடசாலைகள் திறப்பு – தமிழக அரசு அனுமதி!!

நாளை தொடக்கம் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்காக பள்ளிகளைத் திறப்பதற்கு  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என இந்திய ஊடகங்ள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்ரெம்பர் 15ஆம் நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும், வழிபாட்டு Read More

Read More
LatestNews

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் அரசாங்கத்தின் முக்கிய வேண்டுகோள்!!

இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குமாறு வெளிநாட்டு வாழ் இலங்கையார்களிடம் இராஜாங்க அமைச்சரும், விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுடனான உரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டின் வைத்தியசாலைகளில் வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவற்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More
LatestNews

அரச ஊழியர்கள் சம்பளத்தின் பாதியை விட்டுக்கொடுத்தால் நாட்டை முடக்கத் தயார் – இராஜாங்க அமைச்சர் தகவல்!!

இலங்கையை முழுமையாக இரண்டு வாரங்கள் முடக்க வேண்டுமாயின் அரச ஊழியர்கள் தங்களது மாதாந்த சம்பளத்தில் சரிபாதியை அரசாங்கத்திற்கு அன்பளிப்பு செய்ய வேண்டும் என தேசிய வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். நாட்டை முடக்குமாறு முன்வைக்கப்படும் கோரிக்கை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், “ஒவ்வொரு தரப்பினரும் நாட்டை மூடுமாறு யோசனை முன்வைக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அனைத்து அரச ஊழியர்களும் மாத சம்பளத்தில் சரிபாதியை விட்டுக் Read More

Read More