#Government

LatestNewsTOP STORIES

நா‌ட்டு நிலமையால் போராட்டத்தில் கண் கலங்கிய காவல்துறை அதிகாரி!!

குருநாகலில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த போது கடமையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் இளைஞர்களின் உணர்ச்சிகரமான பேச்சால் கண்கலங்கினார்.   இந் நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.   குருநாகலில் உள்ள பிரதமரின் ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். ஆனால் காவல்துறையினர் வீதித் தடைகளை அமைத்து தடுத்தனர்.   இதனை தொடர்ந்து, நாங்களும் உங்கள் பிள்ளைகள் போன்று தான் எங்கள் எதிர்காலத்திற்காக போராடுகிறோம் என தங்கள் இன்னல்களை காவல்துறையினருக்கு எடுத்துக்காட்டினார்கள்.   Read More

Read More
LatestNewsTOP STORIES

பிறந்து ஒரு நாளேயான குழந்தையுடன் வீதிக்கு வந்த பெற்றோர்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று  வயோதிபர் ஒருவர் நடுவீதியில் அமர்ந்து தனது எதிர்ப்பை அரசாங்கத்திற்கு எதிராக வெளியிட்டுள்ளார். குறித்த வயோதிபர் கொழும்பு – கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்தில் வீதியின் நடுவில் அமர்ந்து தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். முதியவர்கள், கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் என அனைவரும் தற்போது வீதிகளில் இறங்கி நீதிக்கான போராட்டத்தினை முன்னெடுத்து Read More

Read More
LatestNewsTOP STORIES

மஹிந்தவைத் தவிர அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.   “பிரதமர் தொடர்ந்து செயல்படுவார் மற்றும் அமைச்சரவையில் உள்ள மற்ற அனைத்து உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு கையளித்துள்ளனர்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.   அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் கோபத்திற்கு மத்தியில் புதிய அமைச்சரவை அமைக்கப்படுவதற்கு வழிவகை செய்யும் வகையில் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக சம்மதித்துள்ளனர்.   இதன்படி, தற்போதைய அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி Read More

Read More
LatestNewsTOP STORIES

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது பதவியிலிருந்து ராஜினாமா!!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ரொஷான் ரணசிங்க தனது இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்தும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது பதவி விலகல் தொடர்பாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு விரிவான கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பி வைத்துள்ளார். கடந்த பருவத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தியதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக Read More

Read More
indiaLatestNewsTOP STORIESWorld

இந்தியாவிடமிருந்து கிடைக்கவுள்ள 4000mt மிதக்கும் தடாகத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது!!

இந்தியாவிடமிருந்து இலங்கை கடற்படைக்கு வழங்கப்படவுள்ள 4000 தொன் மிதக்கும் தடாகத்திற்கான (Floating Dock) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தினால் (Goa Shipyard Ltd) நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த மிதக்கும் தடாகமானது, 30 மாதங்களுக்குள் திருகோணமலை கடற்படைத்தளத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இதற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இந்தியா ஒதுக்கியுள்ளது. இதனை தவிர, 06 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டில் இலங்கை கடற்படை தலைமையகத்திலும் , ஏனைய 8 இடங்களிலும் சமுத்திர மீட்புப் Read More

Read More
LatestNewsTOP STORIES

17 அரச தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசின் நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்புக்கு சொந்தமான மற்றும் இணை சேவைகளில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் பல இணைந்து இன்று(10) அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளன.   சம்பள கொள்கையை மீறி தெரிவுசெய்யப்பட்ட சேவைகளுக்கு மாத்திரம் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றமை, பதவி உயர்வு செயன்முறையில் காணப்படும் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.   அரச சேவை பொறியியலாளர்கள் சங்கம், அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கம், உள்நாட்டு Read More

Read More
LatestNewsTOP STORIES

மின்சாரத்தை சேமிக்க அரச நிறுவனங்களில் AC, Fan பாவனை கட்டுப்படுத்தப்படும்……. பொது சேவைகள் அமைச்சு!!

அரச நிறுவனங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்பதன் ஊடாக செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்றை பொது சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, அரச நிறுவனங்களில் வளி சீராக்கிகளின் (A.C) பாவனை கட்டுப்படுத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. கூட்டங்கள் மற்றும் பிற நோக்கங்களுக்காக வெளிமாவட்ட அதிகாரிகளை கொழும்புக்கு அழைப்பதை மட்டுப்படுத்தவும் சுற்றறிக்கையினூடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சில அறிவுறுத்தல்கள் இந்த சுற்றறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை பின்பற்றி எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. ~ Read More

Read More
LatestNewsTOP STORIES

சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பில் இன்று முடிவு!!

சுகாதார சேவை தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பில், இன்று அதன் நிறைவேற்றுக் குழு ஆராயவுள்ளது. இருப்பினும், சுகாதார அமைச்சு இறுதியாக தங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்து எழுத்து மூல ஆவணத்தை தம்மிடம் கையளிக்க வேண்டும் என அதன் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். அந்த ஆவணம் கிடைக்கப்பெற்றதன் பின்னர், பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   இதேவேளை, தாதியர், இடைநிலை மற்றும் நிறைவுகாண் சேவை உள்ளிட்ட சுகாதார Read More

Read More
LatestNewsTOP STORIES

வடக்கு மாகாண ஆளுநர் அரச உத்தியோகத்தர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

வடக்கில் இனி அரச உத்தியோகத்தர்கள் பொது மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் வேலைத்திட்டம் விரைவில் உருவாக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan Thiyagaraja) தெரிவித்துள்ளார். இன்று வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது குறித்து தொடர்ந்து தெரிவிக்கையில், “வடமாகாண ஆளுநராக நான் கடமைகளை பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. எனக்கு ஒவ்வொரு நாளும் 20க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கின்றன. சிலர் நேரிலும் வந்து என்னை Read More

Read More
LatestNewsTOP STORIES

தனியார் மயமாகும் புகையிரத சேவை…… புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு!!

தற்போதைய அரசாங்கம் நாட்டிலுள்ள புகையிரத சேவையை தனியார் மயமாக்குவதற்கு தீர்மானித்துள்ளது என புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு எதிராகத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இன்றைய கலந்துரையாடலின் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்படும் எனவும் புகையிரத தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Read More