#gotabaya rajapaksa

FEATUREDLatestNewsTOP STORIES

தென்னிலங்கையில் வெடித்த கலவரம்….. 7 பேர் உயிரிழப்பு – வெளிவரும் பகீர் தகவல்கள்!!

நேற்று திங்கட்கிழமை ஏழு பேர் இறந்துள்ளனர் மற்றும் 220 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஏ.வி.சரத் குமார, அவரது இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பிரதேச சபைத் தலைவர் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதேவேளை, நேற்று இரவு அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது கண்ணீர் புகைக்குண்டு வெடித்ததில் பொலிஸ் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   Read More

Read More
LatestNewsTOP STORIES

வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள தே‌தி குறிப்பிடாமல் வேலை நிறுத்த போராட்டம்!!

பல்வேறு தொழிற்சங்கங்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.   வன்முறைகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்திற்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.   இன்று(10/05/2022) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தமது உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.   அதனடிப்படையில், அரசியல்வாதிகள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   இதனிடையே, சுகாதார ஊழியர்களும் நேற்று(09/05/2022) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க Read More

Read More
LatestNewsTOP STORIES

அவசரமாக கூடப்படது ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்!!

ஜனாதிபதிக்கும் சமயத் தலைவர்கள் குழுவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.   அத்துடன், தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று காலை இடம்பெறவுள்ளதாக அரச தலைவர் தெரிவித்துள்ளார்.   மத தலைவர்கள் பல ஆலோசனைகளை வழங்கினர். கட்சி சார்பற்ற பிரதமர் நியமனம் 15 பேர் கொண்ட வரையறுக்கப்பட்ட அமைச்சரவை சிவில் மக்களை கொண்ட ஆலோசனைக் குழுவை நிறுவுதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.   இது தொடர்பான பிரேரணைகள் இன்று நடைபெறவுள்ள Read More

Read More
LatestNewsTOP STORIES

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர கால நிலை குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கண்டனம்!!

நேற்று(06/05/2022 ) ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலை குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கண்டனம் வெளியிட்டுள்ளார். தனது டுவிட்டர் செய்தியில் பதிவு ஒன்றை விடுத்தே குறித்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான ‘அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்’ அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே Click செய்யுங்கள்……… மற்றொரு அவசர நிலை குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளது. அமைதியான குடிமக்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும் மற்றும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவால்களுக்கு நாட்டை மீண்டும் செழிப்புக்கான Read More

Read More
LatestNewsTOP STORIES

நா‌ட்டி‌ல் அமுல்படுத்தப்பட்டது அவசரகால சட்டம்!!

நேற்று (06/04/2022) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

எதிர்வரும் 06 மற்றும் 11 ஆம் திகதிகளில் முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால்….. இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க!!

எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லாவிட்டால் எதிர்வரும் 11/05/2022 ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க விடுத்துள்ள விசேட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 6ம் திகதி அரசாங்கத்திற்கு ஒத்திகை வழங்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னரும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகாவிட்டால் நாடு பூராகவும் சகல துறைகளிலும் தொடர்ச்சியான ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் எனவும் சமரசிங்க Read More

Read More
LatestNewsTOP STORIES

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து திட்டங்களையும் உருவாக்கியுள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. சாதாரணமாக ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தாலும் அரச தலைவருக்கு எதிராக இதுவரை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் Read More

Read More
LatestNewsTOP STORIES

மீண்டும் மின்கட்டணங்கள் உயர்வு!!

அரசாங்கத்தின் கொள்கையைப் பெற்றவுடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களிடம் கருத்துக் கோரலை நடத்தவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. நீர் மின் பற்றாக்குறையால் அதிக எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஒரு அலகு மின்சாரத்துக்கான செலவு அதிகரித்துள்ளது. இலங்கை மின்சார சபை ஒரு அலகு மின்சாரத்துக்கு 53 ரூபாவை செலவழித்த போதிலும் நுகர்வோர் ஒருவருக்கு 16 ரூபாவே அறவிடப்படுகின்றது. இதேவேளை, கடந்த 8 வருடங்களாக மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவில்லையென பொதுப் Read More

Read More
LatestNewsTOP STORIES

ஜனாதியால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்!!

வர்த்தக அமைச்சின் செயலாளர் ஜே.எம்.பி.ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அரச தலைவரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது வர்த்தக அமைச்சின் செயலாளராக இருப்பதுடன், ஜயவர்தன பல நிறுவனங்களின் தலைவராகவும் மேலும் பல நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார். ஜயவர்தனவை செயலாளர் பதவியிலிருந்து நீக்குமாறு முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அமைச்சின் புதிய செயலாளராக நீல் பண்டார ஹபுஹின்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More
LatestNewsTOP STORIES

அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி இடைக்கால அரசாங்கம்…… ஜனாதிபதி கோட்டாபய!!

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சர்வகட்சிகளையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி என்ற வகையில் கொள்கை அடிப்படையில் இணக்கப்பாட்டை தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  கட்சித் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார். பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் முழுமையான இணக்கத்தை கட்சித் தலைவர்களுக்கு கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Read More