தற்காலிக கூடாரங்களை அகற்றியதால் நடு வீதியை வீடாக்கிய போராட்டகாரர்கள்!!

அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் நடுவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அலரிமாளிகைக்கு அருகில் வீதியோர போராட்டக் கூடாரங்களை காவல்துறையினர் அகற்றியதையடுத்து அவர்கள் இவ்வாறு நடுவீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோகமவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது.

Read more

கொழும்பை வந்து ஆர்ப்பாட்டகாரர்களுடன் சேர்ந்தது மற்றுமொரு அணி!!

மக்களை துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் கொழும்பு நோக்கி படையெடுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளனர்.   கொழும்பின் மொறட்டுவை பகுதியை வந்தடைந்த குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது காலிமுகத்திடலை நோக்கி நகரவுள்ளதாக தெரியவருகிறது.   தற்போது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கத்தை விரட்டியடித்து மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவோம்” என்ற அடிப்படிடையில் இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

காலி முகத்திடல் மைதானத்தில் பாரிய போராட்டம்!!

கொழும்பு – காலி முகத்திடல் மைதானத்தில் இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காவல்துறை கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய காவல்துறை பிரிவுகளில் இருந்து விசேட காவல்துறை குழுக்களும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்குவதற்காக கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ​​ போராட்டக்காரர்கள் கலவரமாக நடந்து கொள்ளாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் எந்த பிரச்சனையும் இருக்காது. எவ்வாறாயினும், Read More

Read more