ஜேர்மனியில் மாணவர்களுடன் சென்ற ரயில் தடம் புரண்டது!!

ஜேர்மனியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.   ஜேர்மனியின் முனிச் நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் கார்மிஷ்-பார்டென்கிர்சென் என்ற பவேரியன் ஸ்கை ரிசார்ட்டின் வடக்குப் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது ரயிலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 60 பயணிகள் நிரம்பி இருந்ததாகவும் இதில் 4 பேர் வரை உயிரிழந்ததுடன் 30 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read More

Read more

உக்ரைனுக்கு தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், ஏவுகணைகளை அனுப்பவுள்ள ஜேர்மனி!!

‘ஜேர்மனி 1,000 தாங்கி எதிர்ப்பு ஆயுதங்களையும் 500 “ஸ்டிங்கர்” தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணைகளையும் உக்ரைனுக்கு அனுப்பவுள்ளது’ என்ற தகவலை அந்தநாட்டு அரசு உறுதிசெய்துள்ளது. மோதல் நிகழும் பகுதிகளுக்கு ஆயுத ஏற்றுமதியைத் தடை செய்யும் அதன் நீண்டகால கொள்கையில் பெரிய மாற்றத்தை இந்த நடவடிக்கை காட்டுகிறது. “இந்தச் சூழ்நிலையில், விளாடிமிர் புடினின் இராணுவத்திற்கு எதிராக உக்ரைனை பாதுகாப்பதில் எங்களால் முடிந்தவரை ஆதரவளிப்பது எங்கள் கடமை,” என்று ஜேர்மன் அரசுத் தலைவர் ஓலோஃப் ஸ்கோல்ஸ் கூறியுள்ளார்.

Read more

மின்னலொன்று படைத்தது புதிய சாதனை….. ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு!!

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இந்த மின்னலின் தூரம் லண்டன் நகரில் இருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரம் வரையான தூரத்திற்கு சமமானது என அளவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் 770 கிலோமீட்டர் தூரம் இந்த மின்னல் தெரிந்ததாகவும் ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு Read More

Read more

திடீரென வெடித்தது 02 ம் உலகப்போர் குண்டு…… ஜேர்மனியில் சம்பவம்!!

ஜேர்மனியின் முனிச் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் தோண்டுதல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தவேளை 2ம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டு திடீரென வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். ஜேர்மனியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான முனிச் நகரில் டோனர்ஸ்பெர்கர்ப்ரூக்(Donnersbergerbrücke) ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ரயில் நிலையம் அருகே, துளையிடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2ம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிக்காத குண்டு ஒன்று திடீரென வெடித்து Read More

Read more

மீண்டும் ஐரோப்பாவில் வேகமாக பரவிவரும் கொரோனா…… WHO அதிருப்தி!!

கொரோனா வைரஸின் புதிய அலை ஐரோப்பாவில் மிக வேகமாக பரவிவருகின்றமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. ஐரோப்பாவில் கொரோனா தொற்றின் புதிய அலை மிகவும் வேகமாக பரவிவருகின்றது. ஏற்கனவே ஒஸ்ரியா அரசாங்கம் நாட்டை முடக்கியுள்ளது. அதேபோல், நெதர்லாந்து மூன்று வாரத்திற்கு பகுதியளவில் நாட்டை முடக்கியுள்ளது. இந்த நிலையில் ஜேர்மனியில் தொடர்ந்தும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகின்ற நிலையில் பிரித்தானியாவிலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பிராந்தியத்தில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் Read More

Read more

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக உப்புக்கரைசல்! ஜெர்மனியில் அதிர்ச்சி சம்பவம்!!

ஜெர்மனியின் லோவர் சாக்ஸனி மாநிலத்தில் உள்ள ப்ரைஸ்லண்ட் எனும் மாவட்டத்தில் மக்களுக்குத் தடுப்பூசிக்குப் பதில் உப்புக்கரைசல் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு உப்புக்கரைசல் செலுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. செஞ்சிலுவைச் சங்கத்தில் பணிபுரியும் தாதி ஒருவர், தடுப்பூசிக்குப் பதில் உப்புக்கரைசல் போட்டது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, தடுப்பூசியை மீண்டும் ஒருமுறை போட்டுக்கொள்ளும்படி சுமார் 8,600 பேரிடம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதாக, உள்ளூர் மன்றத் தலைவர் தெரிவித்தார். உப்புக்கரைசல் பாதிப்பை ஏற்படுத்தாது. என்றாலும், Read More

Read more