இன்று முதல் சந்தைக்கு வருகிறது எரிவாயுவின் தரம் தொடர்பான தரவுகள் பொறிக்கப்பட்ட கொள்கலன்கள்!!

சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பான தரவுகள் பொறிக்கப்பட்ட கொள்கலன்கள் இன்று முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா (Jayantha d Silva) தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,

தரநிர்ணய நிறுவனத்தின் தரத்திற்கு அமைய ப்ரொப்பன் அளவு 30 சதவீதமாகவும், பியூட்டேனின் அளவு 70 சதவீதமாகவும் கொண்ட, சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை,

மேன்முறையீட்டு நீதிமன்றின் அறிவுறுத்தலுக்கு அமைய சமையல் எரிவாயுவை விநியோகிக்க, எரிவாயு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்குமாறு உரிய எரிவாயு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *