#Covid19

LatestNews

கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும், அது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மாகாண எல்லைகளை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் தொடர்ந்தும் திருப்பி அனுப்பப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு மட்டுமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாகவும் மாகாணங்களுக்கு இடையிலான தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவ்வாறு பயணிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNews

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது எப்போது? கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

பாடசாலை மாணவர்களுக்கு வெகுவிரைவில் தடுப்பூசிகளை வழங்கி விட்டால் ஜுலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், பாடசாலை மாணவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்கி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. 7 லட்சம் தடுப்பூசிகளை, 11, 12 மற்றும் 13ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் Read More

Read More
LatestNews

நாட்டில் குறைந்து செல்லும் தொற்றாளர்கள்! இராணுவத் தளபதி பெவளியிட்ட தகவல்!!

நாட்டில் மேலும் 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று இதுவரை 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 253,024 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More
LatestNews

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதியா? பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்!!

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பதில் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு இன்று காலை முதல் தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். பயணத்தடை தளர்த்தப்பட்டாலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்பவர்கள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும்வரை வெளியில் வரமுடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More
LatestNews

உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் – இராணுவத்தளபதி உத்தரவு!!

ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத்தளபதி தெரிவித்தார். அந்த வகையில், பதுளை, களுத்துறை, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் பல பகுதிகள் முடக்கப்பட்டன. பதுளை ஹூலங்கபொல களுத்துறை யடதொல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அம்பதென்ன வத்த பிரதான நகரம் யடதொல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அம்பதென்ன வத்த க்லே Read More

Read More
LatestNews

கிளிநொச்சியில் கொரோனா தடுப்பூசி ஏற்றிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு ஒவ்வாமை!!

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு ஏற்றப்பட்ட சினோபார்ம் கொவிட் தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக அதிகளவானவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதுவரை வடக்கில் ஏற்றப்பட்டு ஒவ்வாமை என அனுமதிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும் என்றும் கூறப்படுகிறது.

Read More
LatestNews

இன்றிரவு (23) முதல் மீண்டும் பயணத் தடை!!

இன்றிரவு (23) 10 மணி முதல் நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை மறுதினம் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

Read More
LatestNews

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கலில் குறைபாடு – மருத்துவ நிபுணர்கள் குற்றச்சாட்டு!!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு வினைத்திறனற்று இடம்பெறுவதாக மகப்பேற்று மற்றும் மகளிர் நோயியல் விசேட வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியளாலர்கள் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த மாதம் நிறைவடையும்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைய, தகைமைபெறும் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை ஆரம்பித்திருக்க வேண்டும். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியாகும்போது, தகைமையுடைய Read More

Read More
LatestNews

கிழக்கில் தனிமைப்படுத்தலுக்குள்ளான பிரதேசங்கள்!!

மட்டக்களப்பு-காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவிலுள்ள 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவிலுள்ள 8 கிராம சேவகர் பிரிவுகளை இன்று காலை முதல் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவில் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டே 8 கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். தனிமைப்படுத்தப்படவுள்ள 8 கிராம சேவகர் பிரிவு எல்லைகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை Read More

Read More
LatestNews

பாடசாலைகள் மீண்டும் எப்போது திறக்கப்படும்? கல்வி அமைச்சர் பதில்!!!!

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதால் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான உறுதியான திகதியை கூற முடியாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, இணையத்தின் மூலமான கல்வியை மேலும் சிறிது காலம் தொடர வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா தொற்றுநோய் காரணமாக, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. Read More

Read More