#Covid19

LatestNewsWorld

சீனாவின் வுகான் நகரில் மீண்டும் கொரோனா -அதிர்ச்சியில் சுகாதார அதிகாரிகள்!!

ஒரு வருட காலத்துக்கு பின்னர் சீனாவின் வுகான் நகரில் மீண்டும் கொரோனா தொற்று பரவுவதால் அதிர்ச்சி அடைந்துள்ள சுகாதார அதிகாரிகள், அங்குள்ள மக்கள் அனைவருக்கும் சோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். கொரோனாவின் ஊற்றுக்கண் என வர்ணிக்கப்படும் வுகானில் ஒரு கோடியே 10 இலட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு நேற்று திங்கள்கிழமை புலம் பெயர் தொழிலாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வுகானின் அனைத்து மக்களுக்கும் கொரோனா இருக்கிறதா என்பதை அறிய முழுமையான Read More

Read More
LatestNews

அஸ்ட்ராசெனெகா போதுமான அளவு உள்ளது – வைத்தியர் விளக்கம்!!

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற அனைவருக்கும் இரண்டாவது டோஸை வழங்க போதுமான அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். தடுப்பூசியை நிர்வகிப்பதற்காக நிறுவப்பட்ட தடுப்பூசி மையங்கள் பற்றிய தகவல்களுக்கு, சம்பந்தப்பட்ட சுகாதார மருத்துவ அலுவலர் (MOH) துறைகளை தொடர்பு கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். இந்தியாவில் ஏற்பட்ட உள்ளூர் தேவையின் நிமிர்த்தம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆகையால் இலங்கையில் அத்தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு Read More

Read More
LatestNews

திறக்கப்படவுள்ள பாடசாலைகள்?? – கல்விஅமைச்சர் வெளியிட்ட தகவல்!!

ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வெளிக்கள ஊழியர்களில் 83 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தடுப்பூசி இம்மாத இறுதி வாரத்தில் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் பாடசாலைகளை விரைவாக திறந்து கல்வி நடவடிக்களைத் தொடங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடடார்.

Read More
LatestNewsTOP STORIES

யாழில் திருவிழாவில் பங்கேற்ற 49 பேருக்கு கொரோனா!!

யாழ். கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயம் ஒன்றில் அண்மையில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எழுமாறாக 179 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 49 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஆலயத் திருவிழாவில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என அறியப்பட்ட நிலையில், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் பொதுச் சுகாதார பரிசோதகரினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையிலேயே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்கள் அதிகம் அடையாளம் Read More

Read More
LatestNews

இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட பொலிஸார் பலருக்கு கொரோனா!!

இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் முழுமையாக போடப்பட்ட சுமார் 300 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பூசி பெற்றுக்கொண்டு சில வாரங்களுக்குப்பின் இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களம் இந்த நிலைமை குறித்து கவலை எழுப்பியதுடன், சுகாதார நிபுணர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். தடுப்பூசிகளால் வைரஸின் கடுமையான பாதிப்பையும், இறப்புகளையும் தடுக்க முடியும் என்றாலும், மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்படுவதை Read More

Read More
LatestNews

நடமாடும் தடுப்பூசி நிலையங்களை விரைவில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!!

நடமாடும் தடுப்பூசி நிலையங்களை (Mobile vaccination centers) விரைவாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். உடல்நலக்குறைவினால் வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்களுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில், COVID ஒழிப்பு விசேட குழுவுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. கடந்த சில நாட்களாக அடையாளங்காணப்பட்டுள்ள COVID நோயாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால், தடுப்பூசி ஏற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் அது Read More

Read More
LatestNews

தடுப்பூசியினால் “டெல்டா”வை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது! வைத்தியர் எச்சரிக்கை!!

தடுப்பூசி நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் டெல்டா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தற்போது இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களும் தொற்றுக்குள்ளாகும் நிலைமை காணப்படுவதாகவும் அப்பணியாகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஜ்சித் சுட்டிக்காட்டினார். ஆகவே மக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாட்டில் படிப்படியாக சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் தொற்றின் நிலைமையை கருத்திற்கு கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை தளர்த்துவது அல்லது நீடிப்பது குறித்து அறிவிக்கப்படும். Read More

Read More
LatestNews

இலங்கை மக்களுக்கு அவசர அறிவிப்பு!!

இலங்கையில் மக்களை அவதானமாக செயற்படுமாறு அவசர அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் தலைதூக்கியுள்ள டெல்டா வைரஸ் பரவல் தொடர்பிலேயே மக்கள் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.

Read More
LatestNews

மாகாணங்களுக்கு இடையேயான பயண தடை – விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை!!

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை அத்தியாவசிய சேவை மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது என்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறினார். இந்த நிலையில் மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீற முயற்சித்தமைக்காக 900 க்கும் மேற்பட்டோர் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேல் மாகாணத்தின் 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் பொலிஸார் தொடர்ந்து வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று, 413 வாகனங்களில் 928 பேர் Read More

Read More
LatestNews

யாழ். வல்வெட்டித்துறையிலும் அதிகரித்து வரும் ஆபத்து!!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் நேற்று மேலும் 40 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 209 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்  40 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மூன்று நாள்களில் 88 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ். பருத்தித்துறை பகுதியிலும் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More