#Corona

LatestNews

மக்களுக்கு சிறந்த கொரோனா தடுப்பூசி இதுதான் – ஆய்வின் முடிவில் உறுதி!!

டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனேகா கொவிசீல்ட் தடுப்பூசி 95 வீதம் பலனளிக்கின்றது என தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் வைத்தியர் பேராசிரியர் ஹேமந்த டொடம்பஹால தெரிவித்துள்ளார். நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆராய்ச்சியின் பின்னர் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனேகா கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது இரண்டாவது டோஸ்கள் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் அவை Read More

Read More
indiaLatestNewsWorld

40 Metric tons Oxygen நாட்டை வந்தடைந்தது!!

கொரோனா நோயாளர்களுக்கு தேவையான ஒட்சிசனை ஏற்றிய இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் இன்று (23) அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையின் கப்பல் 40 டொன் ஒட்சிசனை கொண்டு வந்துள்ளது. இதேவேளை, இந்தியாவிற்கு சொந்தமான சக்தி கப்பலும் நேற்று 100 டொன் ஒட்சிசனை இலங்கைக்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNews

18 – 30 வயதுக்குட்பட்டோருக்கு அறிவிக்கப்பட்டது நாள்!!

செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து 18 – 30 வயதுக்குட்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சமித கினிகே இதை தெரிவித்தார். மேலும், இலங்கையில் 18 – 30 வயதுக்குட்பட்டவர்கள் 3.2 மில்லியன் பேர் உள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read More
LatestNews

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு பைஸர் தடுப்பூசி??

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு தடுப்பூசி செலுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். பைஸர் போன்ற தடுப்பூசியே சிறுவர்களுக்கு பொருத்தமானதென வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர்களின் சங்கத்தினர் இது தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளனர். தொற்றா நோய் மற்றும் விசேட தேவையுடைய 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துமாறு அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Read More

Read More
LatestNews

நாடு முழுவதும் சுமார் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் – முப்படையினரும் தயார் நிலையில்!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் சுமார் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இதன்போது ஏதேனுமொரு வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள இந்த Read More

Read More
LatestNews

இன்று காலை இலங்கையை வந்தடைந்த பைஸர் தடுப்பூசி!!

இலங்கைக்கு சுமார் 80,000 பைஸர் தடுப்பூசி தொகுதி கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக இன்று அதிகாலை 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளது. இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNews

இன்று முதல் முடக்க நிவாரணக் கொடுப்பனவு!!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ளதால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். கொரோனா தொற்றுக் காரணமாக நாடு எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கொடுப்பனவு பற்றிய தகவலை நிதி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த முடக்க Read More

Read More
LatestNews

ஊரடங்குச் சட்டத்திற்கு மத்தியில் கறுப்புக் கொடி போராட்டம்!!

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணைகளை நடத்தும்படியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குமாறும் கோரி கறுப்பு கொடி போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இப்போராட்டம் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஈஸ்டர் தாக்குதலில் ஆளாகிய தேவாலயங்களில் ஒன்றான நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய ஆலயத்திற்கு முன் மக்கள் கறுப்பு கொடி போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

Read More
LatestNews

முன்றாவது டோஸ் தடுப்பூசி தொடர்பில் வெளியான செய்தி!!

சுகாதாரத் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக சுகாதார பிரிவினர் அதிகளவில் தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் Read More

Read More
LatestNews

இம்முறை 5000 இல்லை – இராஜாங்க அமைச்சர் தகவல்!!

நாடு முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க முடியும் என்று தான் நினைக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனினும், 2,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படலாம் என்று தான் கருதுவதாக அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Read More