கொரோனாவை கண்டுபிடிக்கும் புதிய கருவி….. பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் குழுவினரின் கண்டுபிடுப்பு!!

கொரோனா தொற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு விரைவான ஆன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் முறைகளே தற்போது இலங்கையில் உள்ளன. எனினும், கொரோனாவை கண்டுபிடிக்கும் புதிய கருவி ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் உள்ளிட்ட குழுவினர் உருவாக்கியுள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமாவன்சவின் வழிகாட்டுதலில் இந்த கருவியை மூத்த  உள்ளிட்ட குழு வடிவமைத்துள்ளது. இந்த கருவி சுகாதார அமைச்சர் டாக்டர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது மலிவாக கிடைப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களை விரைவாக அடையாளம் காணவும் உதவுகிறது. ரூபாய் Read More

Read more