உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை வழங்க அமெரிக்கா உறுதி….. ரஷ்யா எச்சரிக்கை!!

உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை வழங்குவது மிகப் பொிய அபாயங்களைக் எதிர்கொள்கிறது என ரஷ்யா எச்சரித்துள்ளது.

மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஜெட் விமானங்களை(Jet fighter flight) வழங்க அமெரிக்கா அனுமதிக்கும் அறிவிப்பைத் தொடர்ந்து,

ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோ தெரிவிக்கையில்,

மேற்கத்திய நாடுகள் இன்னும் நேட்டோவின் விரிவாக்க சூழ்நிலையை கடைபிடிப்பதை நாங்கள் காண்கிறோம். இது தங்களுக்கு மிகப்பெரிய அபாயங்களை உள்ளடக்கியது என்று க்ருஷ்கோ தெரிவித்தார்.

எதுவாக இருந்தாலும்,

F-16 போர் விமானங்கள் வழங்கும் திட்டம் எங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

நாங்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைய தேவையான அனைத்து வழிகளும் எங்களிடம் உள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று(21/02/05/2023) F-16 போர் விமானங்களை வழங்குவது மற்றும் உக்ரேனிய விமானிகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்த அறிவிப்பை G-7 நாடுகளின் உச்சிமாநாட்டில் அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *