விவசாயிகளுக்கு நட்டஈடு -அரசாங்கம் அறிவிப்பு!!

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேதனப் பசளை முறை மூலம் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நட்டஈடு வழங்கப்படும் என கால்நடை வளர்ப்பு, பண்ணை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று இடம்பெற்ற கால்நடை வளர்ப்பு, பண்ணை மேம்பாடு மற்றும் பால் மற்றும் முட்டை உற்பத்தி தொடர்பிலான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேதனப் பசளை முறை மூலம் இழக்கப்படும் உற்பத்திக்களுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்படும். Read More

Read more

X-Press Pearl: முதற்கட்ட நட்டஈடு இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா!!

தீப்பற்றிய X-Press Pearl கப்பல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கான முதற்கட்ட நட்டஈடு இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். அந்த நட்டஈடு கிடைத்தவுடன் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு அவற்றை வழங்கவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். மேலும், மீன்களை சாப்பிடுவதால் ஆபத்துகள் ஏற்படும் என கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் மேலும் கூறினார்.

Read more