கொழும்பின் பிரபல வைத்தியசாலையில் சிறுவனின் மரணம்….. முழுமையான விபரங்கள்!!

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பிலும், மருத்துவர்களின் செயற்பாடு தொடர்பிலும் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கின்றன. சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தமது தரப்பில் தவறு நடந்ததை குழந்தையின் பெற்றோரிடம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று வயதான ஹம்தி எனும் சிறுவன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சிறுநீர் தொற்று நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அச்சிறுவனை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் பரிசோதித்தபோது, Read More

Read more

சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் பல பிரபல வைத்தியர்கள் சிக்கினர்!!

இரண்டு மருத்துவர்கள் சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய இலங்கை மருத்துவ சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கை மருத்துவ சபையின் ஒழுக்கங்கள் தொடர்பான சட்ட திட்டங்களுக்கு அமைய இந்த மருத்துவர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவச் சபையின் ஆவண காப்பக அதிகாரி மருத்துவ ஆனந்த ஹபுகொட தெரிவித்துள்ளார். இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்து கொண்டுள்ள இரண்டு மருத்துவர்கள் சிறு நீரக விற்பனை தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக கொழும்பு Read More

Read more

பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தம்!!

மருந்து தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் இலங்கை அரசாங்கத்தால் மருந்துகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால், கையிருப்பில் இருந்த மருந்துகள் தீர்ந்த நிலையில் மருந்து தட்டுப்பாடு ஏற்றப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனுதவியின் கீழ் அரசாங்கம் மருந்துகளை இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more

திடீர் மின்தடை….. சத்திரசிகிச்சை நோயாளர்கள் எட்டு பேர் பாதிப்பு!!

நாட்டில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 8 நோயாளர்களின் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதையடுத்து தேசிய வைத்தியசாலை அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் பல அப்பாவி நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இன்றையதினம் முற்பகல் வேளை தொடக்கம் திடீரென நாடு முழுவது மின்சாரத்தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more

சிறுவர்கள் பலருக்கு கொரோனா – கொழும்பு மருத்துவமனையில் அனுமதி!!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 சிறுவர்கள் ஐ.டி.எச் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், இந்த சிறுவர்கள் எவருக்கும் கடுமையான பாதிப்புகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, புதிய கொரோனா அலை மூலம் சிறுவர்களே அதிகமாக பாதிக்கப்படுவதாகஅவர் தெரிவித்தார். மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் தற்போது அதிகரிப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, ஐ.டி.எச் வைத்தியசாலை கடுமையான இட நெரிசலில் உள்ளதாகவும் எனினும் Read More

Read more