கொழும்பில் பாரிய தீ விபத்து! 15 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு – புறக்கோட்டையில் ஆடை வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீயினால் 15 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு காயமடைந்தவர்களில் 6 பேருக்கு கடும் தீக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் குறிப்பிடுகின்றனர். கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். புறக்கோட்டை- 2ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடை Read More

Read more

கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிப்பு !!

கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. கொழும்பு − 07 − ரீட் மாவத்தையிலுள்ள கட்டடமொன்றில் இயங்கிவந்த தனியார் உணவகத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவே, இந்த வெடிப்புக்கான காரணம் என அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், எரிவாயு சிலிண்டரோ அல்லது வேறு வெடி பொருட்களோ வெடிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Read more