#CEB

LatestNews

நாளை முதல் நாட்டில் மின்வெட்டு!!

நாட்டின் சில பகுதிகளில் நாளை முதல் ஒரு மணிநேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாலை 6 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை வெவ்வேறு இடங்களுக்கு ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை முழுவதுமாக வழமைக்கு கொண்டு வருவதற்கு சில நாட்கள் தேவைப்படுகின்றது. இதனாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மின்சாரத் தேவையின் அடிப்படையில் குறுகிய Read More

Read More
LatestNews

பொறியியலாளர்களும் எதிர்காலத்தில் கடமையில் இருந்து நீக்கப்படுவார்கள்….. மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம்!!

மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் பொறியியலாளர்களும் எதிர்காலத்தில் கடமையில் இருந்து நீக்கப்படுவார்கள் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கையின் போதும் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் இயங்குதளங்களின் பொறியியலாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அடுத்த கட்டமாக அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவாடு தெரிவித்தார். மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையானது படிப்படியாக தீவிரப்படுத்தப்பட்டு இறுதியில் வேலைநிறுத்தம் செய்யப்படும் வரை அமுல்படுத்தப்படும் எனவும் Read More

Read More
LatestNews

அரசியல் நோக்கங்களை வைத்து போராடடம் மேற்கொண்டால் நாடு முடக்கப்படும்….. வசந்த யாபா பண்டாரா!!

நாட்டில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களை முன்னெடுத்தால் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படும் என சிறிலங்கா பொதுசன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டாரா ( Vasantha Yapa Bandara) தெரிவித்துள்ளார். போராட்டங்கள் காரணமாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு நாட்டை முடக்கினால் பொருளாதார ரீதியில் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Read More
LatestNews

நாளை(03/11/2021) இருளில் மூழ்குமா நாடு!!

மின்சார விநியோகத்தை நிறுத்தி இதன் மூலம் பொது மக்கள்  வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். அதேபோல் தாம் போராட்டத்தில் ஈடுபடும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரி செய்ய யாரும் முன்வர மாட்டார்கள், தங்களது தொழிற்சங்கத்தினர் இல்லாவிட்டால் மின்சார விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாதென என்றும் தெரிவித்தார். தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னிலையத்தின் 40% Read More

Read More
LatestNews

மின் பாவனையாளர்களுக்கு முக்கிய தகவல்….. அமைச்சர் காமினி லொக்குகே!!

பல மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு பட்டியல் அனுப்பப்பட்ட போதிலும், தொடர்ந்தும் கட்டணத்தைச் செலுத்த தவறியவர்களின்  மின்சார விநியோகத்தை துண்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கொரோனாத் தாக்கம் காரணமாக ஏற்படும் வருவாய் இழப்பைக் கருத்தில் கொண்டு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு சில நிவாரணங்களை வழங்க அரசாங்கம் முடிவு Read More

Read More
LatestNews

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு போராட்டம்!!

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கம் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டு தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால்( Ranjan Jayalal) தெரிவித்துள்ளார். நாளைய தினம் கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையினை மீளப்பெறுமாறு தெரிவித்து பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்க, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தயாராகுவதாக Read More

Read More
LatestNews

அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ள மின்சாரசபை தொழிற்சங்க ஊழியர்கள்….. நாடு இருளில் மூழ்கும் அபாயம்!!

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் அரசின் செயற்பாட்டுக்கு எதிராக மின்சாரசபை தொழிற்சங்க ஊழியர்கள் அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளனர். இதன்படிநாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஊழியர்கள் இதுபற்றி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் நடந்த விமல் அணி தலைமையில் நடந்த பேச்சில் இது தொடர்பாக தெரிவித்துள்ளனர். அமெரிக்க நிறுவனத்திற்கு யுகதனவி மின் உற்பத்தி நிலைய பங்குகளை வழங்கும் அரசின் செயற்பாட்டுக்கு Read More

Read More
LatestNews

“தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் செயற்பாட்டினை எதிர்த்து வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு வருகிறோம்……” – மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் இணைப்பாளர் ரஞ்ஜன் ஜயலால்!!

தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் செயற்பாட்டினை எதிர்த்து வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு வருவதாக மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் இணைப்பாளரான ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கபட்டுள்ளதாவும் அவர் மேலம் தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதேவேளை நேற்றைய தினத்தில் தென்மாகாணம் மற்றும் மேல்மாகாணத்தில் ஓரிரு இடங்களில் மின்தடை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் வேலைநிறுத்தப் Read More

Read More