அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பு!!
அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அது குறித்த வர்த்தமானி அறிவிப்பு சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சீனியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலையாக 125 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சீனி விலை 122 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சிவப்புச் சீனியின் விலை 128 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சிவப்புச் சீனியின் விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Read More
Read more