அதிகரிக்கும் ஆட்டோ கட்டணம்!!

நாட்டில் நள்ளிரவு தொடக்கம் எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து முச்சக்கர வண்டிகளின் போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேன (Lalith Dharmasena) தெரிவித்துள்ளார். அதன்படி முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை அதிகபட்சமாக 80 ரூபாவினாலும் இரண்டாவது கிலோமீற்றரில் இருந்து அறவிடும் கட்டணத்தை 45 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானித்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் போக்குவரத்துச் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Read more