பால் மாவின் விலை மீண்டும் பாரியளவில் அதிகரிப்பு!!

இலங்கையில் பால் மாவின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியொன்றின் விலையே இவ்வாறு உயர்வடைத்துள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா ஒன்றின் விலை 1,020 ரூபாவாக உயர்வடைத்துள்ளது.

Read more

சங்கிலியன் சிலை முன்றலில் ஆர்ப்பாட்டம்!!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சங்கிலியன் சிலை முன்றலில் ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்தும், விலை ஏற்றத்திற்கு எதிராகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளர் அ.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்றது.

Read more

இரு நாட்களில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்….. பால் மா இறக்குமதியாளர்கள்!!

இறக்குமதி செய்யப்படும் பால் மா பொதி ஒன்றின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கிராம் பால் மா பொதியின் விலையை 550-600 ரூபாவால் அதிகரிக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். பால் மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் இரண்டு நாட்களில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read more

மீண்டும் ஒரு கிலோகிராம் பால் மா விலையை 300 ரூபாவினால் அதிகரிக்க தயார்!!

இறக்குமதி செய்யப்படும் பால் மா ஒரு கிலோகிராமின் விலையை 300 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தயாராகி வருகின்றது. 400 கிராம் பக்கெட் பால் மாவின் விலையை 120 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 5,500 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், பால் மாவின் விலையை அதிகரிப்பதை தவிர்த்து வேறு மாற்றுவழி இல்லையென Read More

Read more

பால்மா தொடர்பில் வெளியிடப்பட்ட மற்றுமொரு புதிய செய்தி

வார இறுதியில் தட்டுப்பாடின்றி நுகர்வோர் பால்மாவினை சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியுமென பால்மா வர்த்தகர்கள் சங்கத்தின் முக்கியஸ்தரான லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்தார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், மேலும் 8000 தொன் பால் மாவுக்கான தட்டுப்பாடு தற்போது சந்தையில் நிலவுவதாகவும் மட்டுப்படுத்தப்பட்ட தினங்களில் ஒரே தடவையில் பெருமளவு பால்மாவை சந்தைக்கு விநியோகிக்க முடியாதுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் மேலும் 8 கொள்கலன் பால்மா விடுவிக்கப்படுவதற்காக துறைமுகத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   Read More

Read more

1Kg பால்மா விலையினை 350 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும்…. இறக்குமதியாளர்கள் சங்கம்!!

பால்மாக்களின் விலையினை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வாழ்க்கை செலவு பற்றிய குழு எதிர்வரும் வியாழக்கிழமை கூடி இறுதி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளது. எனினும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையினை 200 ரூபாயில் உயர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நிதி அமைச்சு கடந்த வாரம் அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரு கிலோகிராம் பால்மா விலையினை 350 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர். சர்வதேச சந்தையில் பால்மாக்களின்  விலை Read More

Read more

பால்மா இறக்குமதியாளர்களின் புதிய கோரிக்கை!! அதிகரிக்கப்படுமா விலை??

ஒரு கிலோவுக்கு ஆகக் குறைந்தது 260 ரூபாய் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என பால்மா இறக்குமதியாளர்கள் புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.. முன்னதாக, அவர்கள் ஒரு கிலோவுக்கு 350 ரூபாய் விலை உயர்வை நாடினர். மேலும், இறக்குமதியாளர்கள் சுங்க வரி, துறைமுகம் மற்றும் விமான நிலைய வரிகளை அரசாங்கம் தள்ளுபடி செய்ய முன்வந்ததை வரவேற்றனர். இருப்பினும், வரி விலக்கின் தாக்கம் ஒரு கிலோவுக்கு 35 ரூபாய் மட்டுமே இலாபம் இருக்கும் என ஒரு தொழில்துறை செய்தித் தொடர்பாளர் Read More

Read more