பால்மா இறக்குமதியாளர்களின் புதிய கோரிக்கை!! அதிகரிக்கப்படுமா விலை??
ஒரு கிலோவுக்கு ஆகக் குறைந்தது 260 ரூபாய் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என பால்மா இறக்குமதியாளர்கள் புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்..
முன்னதாக, அவர்கள் ஒரு கிலோவுக்கு 350 ரூபாய் விலை உயர்வை நாடினர்.
மேலும், இறக்குமதியாளர்கள் சுங்க வரி, துறைமுகம் மற்றும் விமான நிலைய வரிகளை அரசாங்கம் தள்ளுபடி செய்ய முன்வந்ததை வரவேற்றனர்.
இருப்பினும், வரி விலக்கின் தாக்கம் ஒரு கிலோவுக்கு 35 ரூபாய் மட்டுமே இலாபம் இருக்கும் என ஒரு தொழில்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
உலக சந்தையில், பால்மா விலை ஒரு டன் 4,300 அமெரிக்க டொலராக இருந்தது. இப்போது 3,800 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது. உள்ளூர் சந்தையில் எங்களால் இலாபம் ஈட்ட முடியாது.
வரிச்சலுகையை தள்ளுபடி செய்வதன் மூலமும், உலகச் சந்தையில் விலை வீழ்ச்சியின் மூலமும், பால்மா விலையை இன்னும் 260 ரூபாய் உயர்த்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்..
இதற்கிடையில், மில்கோ (PVT) லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் லசந்த விக்ரமசிங்க தெரிவிக்கையில்,
உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கவும் புதிய பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும் இலங்கைக்கு இது சிறந்த வாய்ப்பாகும் என்றார்.
அத்தியாவசிய உணவுப் பொருளான பால்மா மீதான கட்டுப்படுத்தப்பட்ட விலையை நீக்க வேண்டும். அதன்பின், உள்ளூர் பால் பண்ணையாளர்களுக்கு நியாயமான விலையை நாங்கள் வழங்க முடியும்.
இதேவேளை, ஒரு கிலோ பால்மா தயாரிக்க எட்டு லீட்டர் பால் தேவை என்றார்.