கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக்கைதி தப்பியோட்டம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக்கைதி ஒருவர் காலி – வந்துரம்ப பகுதியில் தப்பிச் சென்றுள்ளார். குறித்த கைதியை பூசா சிறைச்சாலையிலிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு பஸ்ஸில் அழைத்துச் செல்லும் போது, ஜன்னலினூடாக அவர் தப்பிச்சென்றதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இதேவேளை, கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளர் ஒருவரும் தப்பிச் சென்றுள்ளார்.

Read more

அடுத்த இரண்டு வாரங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!!

முதல் 31ஆம் திகதி வரையான 2 வார காலப்பகுதியில் அடையாள அட்டை இலக்க முறைக்கமைய வீட்டில் இருந்து வெளியே செல்லும் நடைமுறை அமுலாகும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை திட்டமிடும் போது அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, அடையாள அட்டை இலக்கத்திற்கமைய ஒருவர் மாத்திரம் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு Read More

Read more

அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருக்கும்! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்!!

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார். இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரையில் இந்த பயணக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் மட்டும் மருந்துகளை விநியோகம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் தொடர்பிலான நடைமுறை எதிர்வரும் 17ம் Read More

Read more

இலங்கையில் நேற்று அதிகளவானவர்கள் கைது! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறிய 617 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். தனிமைப்படுத்தல் விதிகளை மீறியவர்களில் அதிகமானோர் நேற்றையதினமே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையில் நேற்யைதினம் 19 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க Read More

Read more