#Accident

LatestNewsTOP STORIES

இன்று அதிகாலை வவுனியாவில் பாரிய தீ விபத்து!!

வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள பிரபல மதுபான நிலையத்தில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.50 மணியளவில் குறித்த நிலையத்தில் தீ பற்றிய நிலையில் வவுனியா நகரசபை தீ அணைக்கும் பிரிவினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டும் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தீ கட்டிடம் முழுவதும் பரவியது. தீ விபத்து தொடர்பில் வவுனியா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
LatestNewsTOP STORIES

வாகனம் விபத்திற்குள்ளானதில் மின்கம்பிகள் இருந்து மின்சாரம் தடை!!

நாவற்குழியில் வாகனம் ஒன்று விபத்திற்குள்ளானதில் மின்சார கம்பிகள் அறுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் சேதமடைந்த மின்கம்பம் அருகிலிருந்து ட்றான்ஸ்போமருடன் மோதியதில் மின்சார கம்பிகள் அறுந்துள்ளன. இதனால், p-content/uploads/2022/01/Chavakacheri-Car-Accident3-296×300.png” alt=”” width=”1342″ height=”1360″ /> தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் Read More

Read More
LatestNewsTOP STORIES

பயணிகள் பேரூந்து – டிப்பர் மோதல்….. 26 பேர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் (படங்கள்)!!

திருகோணமலை – மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். அம்பாறையில் இருந்து திருகோணமலைக்கு பயணித்த பயணிகள் பேரூந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளான போதே இந்த 26 பேரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில், வாகனங்கள் இரண்டினதும் சாரதிகளும் அடங்குகின்றனர். இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

Read More
LatestNews

மோட்டார் சைக்கிள் – டிப்பர் வாகனம் மோதி விபத்து….. சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!

மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் மீபே – இங்கிரிய வீதியில் நேற்று மாலை இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மீபே – இங்கிரிய வீதியின் அங்கம்பிட்டிய – உலுகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 50 வயதுடைய பாலிந்தநுவர பிரதேச சபை உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் டிப்பர் Read More

Read More
FEATUREDLatestNews

யாழில் டிப்பர்-மோட்டார் சைக்கிள் கோர விபத்து!

யாழ்.வளைவுக்கு அருகில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நல்லூர் – செம்மணி வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிள், யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் ஏற முற்பட்ட போது, யாழில் இருந்து வந்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் Read More

Read More
LatestNews

திருகோணாலையில் கோரவிபத்து….. ஸ்தலத்திலேயே ஒரு உயிர் பலி!!

திருகோணமலையில் பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் ,திருகோணமலையை நோக்கி மண்கலந்த சிறிய கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகன சாரதியே இவ்வாறு ஸ்தளத்தில் உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Read More

Read More
LatestNews

அதிவேக நெடுஞ்சாலை விபத்து….. இருவர் உயிரிழப்பு!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார். கொட்டாவையில் இருந்து மத்தளை நோக்கி பயணித்த பௌசர் ட்ரக் அதிவேக நெடுஞ்சாலையில் கவனக்குறைவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியுள்ளது. இதில் பாரவூர்தியில் பயணித்த 72 வயதுடைய முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை, பௌசர் ட்ரக் வண்டியின் சாரதியான 61 வயதுடையவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

Read More
LatestNews

வேகக் கட்டுப்பாட்டை இழந்து குளிரூட்டப்பட்ட தனியார் பேருந்து கன்டருடன் மோதி விபத்து….. பயணிகளின் நிலை??

கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் (ஏ 9 வீதியில்) சற்றுமுன்னர் விபத்தொன்று பதிவாகியுள்ளது. கன்டர் ரக வாகனம் சிறிய ரக பிக்கப் வாகனத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு சென்ற நிலையில், இயக்கச்சி பாற்பண்ணை நோக்கித் திரும்ப முற்பட்ட போது பின்னால் வந்த குளிரூட்டப்பட்ட தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து கன்டருடன் மோதியதில் கன்டர் வாகனம் வீதியில் தடம் புரண்டது. சம்பவத்தில், குளிரூட்டப்பட்ட பேருந்தும், கன்டர் வாகனமும் கடும் சேதங்களுக்கு உள்ளான போதும் தெய்வாதீனமாக உயிரிழப்புக்களோ, காயங்களோ ஏற்படவில்லை Read More

Read More
FEATUREDLatestNews

நேர்த்திக் கடன் செலுத்தச் சென்ற குடும்பஸ்தருக்கு தேவாலயத்திற்குள் ஏற்பட்ட விபரீதம்!

வடமராட்சியில் தேவாலயம் ஒன்றின் கூரை இடிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி புல்லாவெளி செபஸ்தியர் தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த இளம் குடும்பம் ஒன்று தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்காக சென்று அங்கு தங்கியிருந்து வழிபாட்டில் ஈடுபட்ட வேளையிலேயே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. குறித்த சம்பவத்தில் கட்டைக்காட்டை சேர்ந்த வினோத் என்பவரே படுகாயமடைந்த Read More

Read More
LatestNews

கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான கார்….. தந்தையும் மகளும் பலி!!

அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லெனிய மற்றும் தொடங்கொடை பகுதிக்கு இடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு நோக்கி வந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாதுகாப்பு சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த Read More

Read More