கொழும்பில் பதற்றநிலை….. ஆர்ப்பதுடக்காரர்களாக மாறிய மாணவர்கள்!!
கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்களால் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று(27/10/2023) மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடைந்துள்ள குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்ட மருத்துவ பீட மாணவர்களின் மீது காவல்துறையினரால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்,
போராட்ட களத்தில் பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
போராட்ட இடத்திற்குள் இராணுவம் நுழைந்துள்ளதுடன் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து,
அப்பகுதியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.