இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் ஒத்திவைப்பு!!
கடந்த இரு ஆண்டுகளாக நிலவிய கொவிட் அச்சுறுத்தலால் தேசிய பரீட்சைகளை குறிப்பிட்ட காலப்பகுதியில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.
இதன் காரணமாக சகல பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
அதற்கமைய,
2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில்,
மூன்று மாதங்கள் என்ற குறுகிய கால இடைவெளியில் மீண்டும் ஆகஸ்டில் உயர்தர பரீட்சைகளை நடத்த முடியாது என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,
2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சைகள் மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகி, நாட்டை நிர்வகிக்கக்கூடிய குழுவொன்றிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.