8 நிமிடத்தில் உருவாக்கப்பட்ட 50″ நீளமும், 12 kg எடையும் கொண்ட இலங்கையின் மிக‌ப்பெ‌ரிய Pizza!

உலக பீட்சா தினமான நேற்று(09/02/2024) நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றின் ஊழியர்களால் இலங்கையின் மிகப்பெரிய பீட்சா உருவாக்கப்பட்டுள்ளது.

ஹோட்டலின் நிறைவேற்று சமையல் கலைஞர் துமிந்த வணிகசேகர இதற்கான முயற்சியை எடுத்திருந்தார்.

பீட்சாவை உருவாக்க தக்காளி, மொஸரெல்லா சீஸ், கோழி இறைச்சி, 04 வெவ்வேறு நிறங்கள் மற்றும் சுவைகள் கொண்ட பெல் பெப்பர்ஸ், ஆலிவ் எண்ணெய் மற்றும் பச்சை வெங்காயம் ஆகியவற்றின் கலவை பயன்படுத்தப்பட்டது.

50 அங்குல நீளமும் 12 கிலோ எடையும் கொண்ட இந்த பீட்சாவை 08 நிமிடங்களில் பேக் செய்ய முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த ஹோட்டல் வளாகத்திற்கு 100க்கும் மேற்பட்டோர் பீட்சாவை சுவைக்க வருகை தந்துள்ளனர்.

08 பேர் ஒரே நேரத்தில் ரசிக்கும் வகையில் 25 அங்குல பீட்சா துண்டுகள் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *