CINEMAFEATUREDindiaLatestNews

நடிகர் சூரி நடிக்கும் ‘மண்டாடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘மாமன்’. லார்க் ஸ்டுடியோ சார்பில் கே.குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதாகைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 16-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

‘மாமன்’ படத்திற்கு பிறகு நடிகர் சூரி மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

மண்டாடி என்பவர் நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், நான் முத்துகாளியாக, இந்த ஆட்டம் அடுத்த லீக்கிற்குள் நுழைகிறது” என்று பதிவிட்டுள்ளார். அந்தஅந்த போஸ்டரின் சூரியின் டி சர்ட் பின்பு முத்துகாளி என்று எழுதப்பட்டுள்ளது.