600 பில்லியன் ரூபா பெறுமதியான 350 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட்து!!
600 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
350 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
பனாமாவில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட கப்பலில் இருந்த பழைய இரும்புப் பொருட்கள் கொண்டுசெல்லப்பட்ட கொள்கலனில் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கொள்கலன்கள் பனாமாவிலிருந்து துபாய் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதுடன்,
இலங்கையூடாக அதனை இந்தியாவிற்கு அனுப்ப தயாராகியிருந்த நிலையில்,
இலங்கை சுங்கப் பிரிவினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.