ரஸ்யாவிலிருந்து கிடைத்த 15,000 Sputnik-V தடுப்பூசிகள் யாருக்கு செலுத்தப்படும்!!

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி 15,000 sputnik-V தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதுவரையில் 159,88 பேருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 25, 489 பேர் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், இன்று கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசி தொகை கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *