இன்று முதல் ‘சதொச’ நிறுவனத்திலும் விலைகள் அதிகரிப்பு!!
சதொச நிறுவனத்திலும் பொருட்களின் விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை அதிகரிப்புக்கு ஏற்ப சதொசவின் நாடளாவிய கிளைகளில் அததியாவசியப் பொருட்கள் விற்பனை தற்போது செய்யப்படுகின்றதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட பொருட்கள்
அத்துடன்,
முன்னரை விடவும் குறைந்தளவான பொருட்களையே சதொச தனது கிளைகள் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது.
அதன் காரணமாக ஏராளம் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காமையால் திரும்பிச் செல்லும் நிலையும் எற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது