50 லீற்றர் கோடா, 8 லிட்டர் கசிப்பு, மற்றும் 3 வாள்களுடன் யாழில் ஒருவர் கைது!!
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டு வந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண காவல் பிரிவுற்கு உட்பட்ட ஆறுகால்மடம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,
கைசெய்யப்பட்ட நபரிடமிருந்து 50 லீற்றர் கோடா, 8 லிட்டர் கசிப்பு, மற்றும் 3 வாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் மற்றும் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.