மருதனார்மடத்தில் மற்றுமொருவருக்கும் கொரோனா
மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் இன்று (டிசெ. 14) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
உடுவிலைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவருக்கே இன்று தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவரின் மச்சான் உறவுமுறை நபர், மருதனார்மடம் சந்தையில் முதலாவது தொற்றாளருடன் வியாபாரத்தில் ஈடுபடுபவர்.
அத்துடன், இன்று அடையாளம் காணப்பட்டவரின் மச்சான் உறவுமுறை வியாபாரியின் மாதிரி அநுராதபுரம் வைத்தியசாலைக்கு நேற்றுமுன்தினம் அனுப்பிவைக்கப்பட்டது. எனினும் அதன் முடிவு கிடைக்கவில்லை என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது.