சில விசேட தகன பயன்பாட்டுக்காக மட்டும் எரிவாயுவை பயன்படுத்த அனுமதி!!
தொழில் சார்ந்த மற்றும் உடல் தகன பயன்பாட்டுக்காக எரிவாயுவை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
லிட்ரோ (Litro) மற்றும் லாஃப்ஸ் (Laughs) எரிவாயு நிறுவனங்களுக்கே இந்த அனுமயினை நுகர்வோர் விவகார ஆணைக்குழு வழங்கியுள்ளது.
எனினும்,
வீட்டுப் பாவனைக்காக சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக நாட்டில் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் சடுதியாக விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சந்தையில் எரிவாயு விநியோகம் சீராக்கம் செய்யப்பட்டது.
மேலும் கடந்த சில நாள்களாக நாட்டில் பரவலாக எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் எரிவாயு அடுப்புக்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.