FEATUREDLatestNews

குருநாகல் வாகன விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பலி

குருநாகலில் (Kurunegala) இடம்பெற்ற வாகன விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுர பகுதியில் நேற்று (08.03.2025) இடம்பெற்றுள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “ நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுர பகுதியில் வேகமாக பயணித்த வான் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து காவல்துறை சோதனைச் சாவடியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.