`கண்ணப்பா’ படத்தை கிண்டல் செய்பவரை சிவன் தண்டிப்பார் – எச்சரித்த படக்குழு
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் ‘கண்ணப்பா’ எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்களான மது ,சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இவர்களோடு மேலும், மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.
படத்தின் பாடல்கள், கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. மக்களிடையே படத்திற்கான நல்ல வரவேற்பு இருந்தாலும் நெட்டிசன்கள் படத்தை கிண்டல் செய்தும் மீம் கிரியேட் செய்தும் இனையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த நேர் காணல் ஒன்றில் படத்தில் நடித்த ரகு பாபு “யார் இந்த படத்தை ட்ரோல் மற்றும் கிண்டல் செய்தாலும் அவரை சிவன் கண்டிப்பாக தண்டிப்பார். ஒருவரைக்கூட அவர் விடமாட்டார். சிவனின் கோபத்திற்கு ஆளாகாதீர்?” என எச்சரித்துள்ளார்.
If anyone Trolls #Kannappa movie, Lord Shiva will KannaKuthum !!
Adei😀
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 24, 2025